.

மகேஷ் பாபுவின் தந்தை காலமானார்! திரையுலகம் அஞ்சலி செலுத்தினர். thinachuvadi

 தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவரின் தந்தை கிருஷ்ணா.

 70, 80களில் தெலுங்கு சூப்பர்ஸ்டாராக இருந்து வந்த கிருஷ்ணா, இன்று வரை 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், பல படங்களை தயாரித்தும் தெலுங்கு திரையுலகுக்கு வழங்கியுள்ளார்.



 இந்நிலையில், 79 வயதாகும் மூத்த நடிகர் கிருஷ்ணாவுக்கு இன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சையளித்து வந்த நிலையில், அவர் தற்போது உயிரிழந்துள்ளார். திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Previous Post Next Post

نموذج الاتصال